சென்னை: இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக, இன்று பதவியேற்றுள்ள, முதல் பழங்குடியின பெண்மணி, மேதகு திருமதி.திரவுபதி முர்மு அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,தமிழக மக்களின் சார்பிலும்,எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.