தமிழகம்

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு சார்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள், 2022-23-ம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

9-ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை, சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்விஉதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 30-ம் தேதி. மற்றஅனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் அக்.31-ம் தேதி ஆகும்.

SCROLL FOR NEXT