அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மானாமதுரையில் முப்பெரும் விழா நடந்தது.
மாநில நிறுவனத் தலைவர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கணேஷ்பாண்டி, துணைத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், பலராமன், மாவட்டச் செயலாளர் குமார், துணைச் செயலாளர்கள் அசோக், முத்துமணி, பொருளாளர் செந்தில்குமார், மகளிரணி தலைவர் சுதா, செயலாளர் செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.10,000 வழங்க வேண்டும். விடுபட்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அடையாள அட்டை வழங்கி ஆண்டு முழுவதும் களிமண், வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன.