தொழிற்சங்கங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் அரசு தன்னிச்சையாக 20 சத வீதம் போனஸ் அறிவித்துள்ள தாக தொமுச, ஏஐடியுசி கண்டனம் தெரிவித் துள்ளன.
மு.சண்முகம் (தொமுச பொதுச் செயலாளர்):
2015-2016ம் ஆண்டு போனஸ் தொகையை தன்னிச்சை யாக அறிவித்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள் கிறோம். தமிழக அரசு 2015-2016ம் ஆண்டுக்கான போனஸ் அறி விப்பை வெளியிட்டுள்ளது. அதில், குறைந்தபட்சமாக ரூ.8,400, அதிக பட்சமாக ரூ.16,800 பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட போனஸ் சட்டப்படி 2014-2015ம் ஆண்டுக்கான போனஸ் நிலுவைத் தொகை ரூ.8,400 வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
திருத்தப்பட்ட போனஸ் சட்டப் படி போனஸ் மற்றும் கருணைத் தொகை 25 சதவீதம் வழங்க வேண் டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதற் கிடையே, தொழிற்சங்கங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத் தாமல் தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
ஜெ.லட்சுமணன் (ஏஐடியுசி பொதுச் செயலாளர்):
2015-16 நிதி ஆண்டில் உயர்த்தப்பட்ட ஊதிய உச்சவரம்பு மற்றும் கணக்கீட்டு வரம்பின்படி 25 சதவீதம் போனஸூம், கடந்த நிதியாண்டுக்கான போனஸ் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும். மேலும், 30 நாட்கள் பணிபுரிந்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என நாங் கள் கோரிக்கை விடுத்துள்ளாம். ஆனால், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் தன்னிச்சை யாக 20 சதவீத போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டிக்கதக்கது. கடந்த நிதி ஆண்டுக்கான போனஸ் நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.