தமிழகம்

திருப்பூர் | திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக அவதூறு பரப்புவதாக, அவிநாசி காவல் நிலையத்தில் அக்கட்சியினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்ததில், அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளரும், புஞ்சைதாமரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவரும், வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான சரவணக்குமார், ரம்யா தமிழ் என்ற முகநூல் முகவரியில் இயங்கும் சென்னையை சேர்ந்த பாஜக பிரமுகர் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக, அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து சரவணக்குமாரை கைது செய்தனர். ரம்யா தமிழ் என்ற முகநூல் முகவரி குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT