தமிழக சட்டப்பேரவைத் தேர்த லையொட்டி வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் அனைத் தும் பொய்யானவை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே தனது தேர்தல் பிரச்சாரத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலையில் நிறைவு செய்தார். இந்தக் கூட் டத்தின்போது மயிலாப்பூர் தொகுதி தமாகா வேட்பாளர் முனவர் பாட்ஷாவை ஆதரித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தை இத்தனை காலம் ஆட்சி செய்த திமுக, அதிமுகவுக்கு எங்கள் அணி முற் றுப்புள்ளி வைக்கும். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகம் முழுவதும் 102 தொகு திகளுக்கு சென்று வந்துள்ளேன். மக்களின் மனநிலை மாற்றத்தை நோக்கியுள்ளது. எங்கள் கூட்ட ணியில் உள்ள யாருக்கும் குற்றப் பின்னணியோ, ஊழல் பின்ன ணியோ கிடையாது. எங்களிடம் மக்கள் பலமும், தொண்டர்க்ள் பலமும் உள்ளது. திமுக, அதிமுக ஊழல் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த முறை திமுக, அதிமு கவை வீழ்த்தாவிட்டால், தமி ழகத்தை இனி ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது. இதனை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும். திமுக, அதிமுக என இரு கட்சிகளின் வசத்திலும் இருந்த சென்னை மாநகராட்சி எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. இதற்கு அவர்களின் ஏட்டிக்கு போட்டி மனப்பான்மை தான் காரணம். மதுவை தமிழகத்தில் திறந்து விட்டது திமுக என்றால், அதனை பெருக்கியது அதிமுக. கருத்துக் கணிப் புகள் எங்களுக்கு எதிராக வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன், துணை தலைவர் கோவை தங்கம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.