பாஜக தலைவர் அமித்ஷா 3-வது முறையாக இன்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வழிபட்டுவிட்டு திருத் தணி, பல்லாவரம், சென்னை தியாகராய நகர், பாஜக வேட் பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (ஆம்பூர், சங்ககிரி, கோவை, செங்கல்பட்டு), ஸ்மிருதி இரானி (விருகம்பாக்கம்), பிரகாஷ் ஜவடேகர் (விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளை யம், உசிலம்பட்டி), நிதின் கட்கரி (தூத்துக்குடி), வெங்கய்ய நாயுடு (சென்னை கே.கே.நகர்) ஆகியோரும் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் உள்ளிட்டோரும் தமிழகத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.