தமிழகம்

கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஜார்கண்ட் சிறுமி, சடலமாக மீட்பு

செய்திப்பிரிவு

வேலூரில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த ஜார்க்கண்ட் சிறுமி பிரியங்காவின் உடல் 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் கிரீதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் முகர்ஜி. இவரது இளைய மகள் நேகாவின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர். இந்திரஜித்தின் மூத்த மகள் பிரியங்காவின் பிறந்த நாளான கடந்த திங்கட்கிழமை அன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று லாட்ஜுக்கு திரும்பினர்.

அப்போது விடுதிக்கு அருகே நடந்து சென்ற போது கால்வாய்க்குள் தவறி விழுந்தார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் பிரியங்காவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களாக போராடியும் மீட்க முடியாத நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள பாலாற்று பகுதியில் கழிவு நீரில் இன்று காலை அவரின் சடலம் மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT