கடலூர் மாவட்ட இளைஞர்கள் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத் தில் உள்ளனரா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அம்மாவட்ட எஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின் றனர் என்ற தகவல் வெளியானது. இது தொடர்பாக சிறப்பு உள வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலனாய்வுத்துறை ஆய்வு
இதன் உண்மைத் தன்மையை அறிய ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவை இந்திய புலனாய் வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் அந்த இயக்கத்தில் இந்தியாவிலிருந்து 11 பேர் இடம்பெற்றிருப்பதாகவும், அவர்களில் 2 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இதுகுறித்து கடலூர் மாவட்ட எஸ்பி விஜயக் குமாரிடம் கேட்டபோது, ‘‘கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட் டையைச் சேர்ந்த 2 பேர் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு உளவுத்துறையை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும், பல்வேறு விசாரணை கள் நடத்த போலீஸ் அதி காரிகளுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது” என்றார்.