தமிழகம்

நீலகிரி | மழையால் அடியோடு சாய்ந்த பூண்டு பயிர்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கேரட், பட்டாணி, பீட்ரூட், டர்னிப், உருளைக்கிழங்கு, பூண்டு போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான கல்லட்டி, கொல்லிமலை, எம்.பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை போன்ற பகுதிகளில் அதிக அளவு பூண்டு பயிரிடப்படுகிறது.

பல ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிர் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக நிலவியபலத்த சூறாவளிக் காற்று, மழையால் பூண்டு பயிர் அனைத்தும் அடியோடு சாய்ந்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த பூண்டு பயிர் காற்றால் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் கூறும் போது, ‘‘பூண்டு பயிரிடமுதலீட்டுச் செலவு அதிகம். மகசூல் அதிகம் கிடைக்கும்என்று அறுவடைக்கு தயாராக காத்திருந்தோம். காற்று, மழையால் செடிகள் சாய்ந்து விட்டன. பாதிக்கு பாதி கூட கைக்கு கிடைக்காது. கடந்த ஆண்டும் மழையால் பாதிக்கப்பட்டோம். இந்த ஆண்டும் இப்படி ஆகிவிட்டது. பூண்டு பல் விரிந்துவிட்டதால் மண்டியில் நல்ல விலைக்கும் போகாது. போட்ட முதல் கூட கிடைக்காது. அரசு உதவ வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT