சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம்வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிவுஉபசார விழா இன்று மாலை நடைபெறுகிறது.
பாஜக கூட்டணியில் உள்ளஅதிமுகவை சேர்ந்த பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, மாநில பாஜக தலைவர் க.அண்ணாமலை மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், விழாவில் பங்கேற்க பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்துவிமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சார்பில் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தில், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து, அதிமுகவில் நிலவும் சிக்கல் தொடர்பாக பழனிசாமி விவாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.