தமிழகம்

மாற்றுத்திறன் மாணவர்கள் பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்: பொறியியல், மருத்துவம் படிக்க விருப்பம்

செய்திப்பிரிவு

செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.அன்பர சன், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 400-க்கு 377 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் முத லிடம் பிடித்து சாதனை படைத் துள்ளார். அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் 94, கணிதம் 92, அறிவியல் 97, சமூக அறிவியல் 94 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவர் கே.அன்பரசன் கூறியது:

எனது தந்தை கருப்பண்ணன், தாயார் நிர்மலா இருவ ரும் கூலி வேலை செய்கின்றனர். தங்கை சுபாஷினி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். எனக்கு பிறவி யிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது. எனினும், பேசுவதில் குறைபாடில்லை.

வாய் பேச முடியாத, செவித் திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு தனியாக வகுப்பு நடத்தப்படுகிறது. எங்களுக்கு 4 பாடங்கள் மட்டுமே. ஆங்கிலம் கிடையாது. மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆவதே எனது குறிக்கோள் என்றார்.

2-ம் இடம்

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் டி.மாரியப்பன். இந்த மாணவர் செவி குறைபாடு உள்ளவர். ஓரளவுக்கு மட்டுமே பேச முடியும். மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கான பிரிவில் 400-க்கு 375 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் 90, கணிதம் 100, அறிவியல் 90, சமூக அறிவியல் 95.

இந்த மாணவரின் தந்தை தருமன் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தாயார் பார்வதி கூலித் தொழில் செய்து மகனை படிக்க வைத்தார். மாணவர் மாரியப்பன், தனது உற வினரின் சைக்கிள் கடையில் உதவியாளராக பணிக்கு சென் றுகொண்டே படித்தார். நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாரியப்பன் கூறும்போது, ‘‘என் அம்மா, மாமா, பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் எனக்காக கூடுதல் அக்கறை எடுத்து உதவியதால் அதிக மதிப்பெண் பெற முடிந்த து. பிளஸ் 2 தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கலா கூறும்போது, ‘‘மாரியப்பனின் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதால் நல்லுள்ளம் கொண்ட வர்களின் உதவிகள் கிடைத்தால் அவருக்கு பேருதவியாக இருக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT