தமிழகம்

சென்னையில் மின்தடைக்கு காரணம் என்ன?- தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

செய்திப்பிரிவு

மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காகவே சென்னையில் சில இடங்களில் நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டது என்று மின்வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை கோயம்பேட்டில் உள்ள 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் கடந்த 10-ம் தேதி இரவு 10 மணிக்கு 110 கிலோ வோல்ட் மின்னூற்றுச் சட்டத்தில் தீப்பிழம்பு ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற இரண்டு மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டன.

40 நிமிடங்கள்

இதன் காரணமாக கே.கே.நகர், கோடம்பாக்கம், அசோக்நகர், வடபழனி, வளசரவாக்கம், அரும்பாக்கம், தி.நகர், மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் 40 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்பட்டது. பின்னர் தீப்பிழம்பு அணைக்கப்பட்டு மற்ற இரண்டு மின்மாற்றிகள் உடனடி யாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த மின்னூற்றுச் சட்டம் மாற்றியமைக் கப்பட்டு மூன்றாவது மின்மாற்றியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட் டது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT