தமிழகம்

தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் Vs பிற மாநிலங்களின் மின் கட்டணம் - ஓர் ஒப்பீடு

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற்ற பிறகு இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது தமிழகத்தில் பயன்படுத்தும் யூனிட் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள புதிய மின் கட்டணம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தையும் பார்ப்போம்.

தமிழ்நாடு:

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தின்படி 100 யூனிட் வரை கட்டணம் இல்லை. 200 யூனிட் ரூ.255, 300 யூனிட் ரூ.675, 400 யூனிட் ரூ.1125, 500 யூனிட் ரூ.1725, 600 யூனிட் ரூ.2750, 700 யூனிட் ரூ.3650, 800 யூனிட் ரூ.4550, 900 யூனிட் ரூ.5550 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா

கர்நாடகவில் 100 யூனிட் ரூ.592, 200 யூனிட் ரூ.1279, 300 யூனிட் ரூ.2241, 400 யூனிட் ரூ.2843, 500 யூனிட் ரூ.3930, 600 யூனிட் ரூ.4817, 700 யூனிட் ரூ.5904, 800 யூனிட் ரூ.6691, 900 யூனிட் ரூ.7878 என்ற அடிப்படையில் கட்டணம் உள்ளது.

கேரளா

கேரளாவில் 100 யூனிட் ரூ.385, 200 யூனிட் ரூ.775, 300 யூனிட் ரூ.1365, 400 யூனிட் ரூ.2005, 500 யூனிட் ரூ.2765, 600 யூனிட் ரூ.3700, 700 யூனிட் ரூ.4840, 800 யூனிட் ரூ.5760, 900 யூனிட் ரூ.6650 என்று கட்டணம் உள்ளது.

ஆந்திரா

ஆந்திராவில் 100 யூனிட் ரூ.254, 200 யூனிட் ரூ.649, 300 யூனிட் ரூ.1194, 400 யூனிட் ரூ.1794, 500 யூனிட் ரூ. 2572, 600 யூனிட் ரூ.3447, 700 யூனிட் ரூ.4342, 800 யூனிட் ரூ.5217, 900 யூனிட் ரூ.6232 என்ற கட்டணம் உள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் 100 யூனிட் ரூ.598, 200 யூனிட் ரூ.1307, 300 யூனிட் ரூ.2083, 400 யூனிட் ரூ.2829, 500 யூனிட் ரூ.3614, 600 யூனிட் ரூ.4399, 700 யூனிட் ரூ.5351, 800 யூனிட் ரூ.6273
900 யூனிட் ரூ. 7255 என்ற அடிப்படையில் கட்டணம் உள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 100 யூனிட் ரூ.710, 200 யூனிட் ரூ.1210, 300 யூனிட் ரூ.2616, 400 யூனிட் 3532, 500 யூனிட் ரூ.4448, 600 யூனிட் ரூ. 5364, 700 யூனிட் ரூ.6597, 800 யூனிட் ரூ.7830, 900 யூனிட் ரூ. 9063 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் 100 யூனிட் ரூ.515, 200 யூனிட் ரூ.1030, 300 யூனிட் ரூ.1595 , 400 யூனிட் ரூ. 2095, 500 யூனிட் ரூ. 2775, 600 யூனிட் ரூ.3455, 700 யூனிட் ரூ. 4185, 800 யூனிட் ரூ. 4785, 900 யூனிட் ரூ.5645 என்ற அடிப்படையில் மின் கட்டணம் உள்ளது.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் 100 யூனிட் ரூ.515 , 200 யூனிட் ரூ.1045, 300 யூனிட் ரூ.1595, 400 யூனிட் ரூ.2190, 500 யூனிட் ரூ.2785, 600 யூனிட் ரூ.3535, 700 யூனிட் ரூ.4245, 800 யூனிட் ரூ.4955,900 யூனிட் ரூ. 5715 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை தவிர்த்து வேறு எந்த மாநிலங்களிலும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது இல்லை. மேலும், தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை விட மற்ற மாநிலங்களில் தற்போதைய மின் கட்டணம் அதிகமாகவே உள்ளது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT