ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் குப்பந் துறையைச் சேர்ந்தவர் ராஜையன்(60). தெருக்கூத்து,நாடகக் கலைஞர். 40 ஆண்டுகளாக கோயில் விழா, மேடைநிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி இரவு உக்கரம் கிராமத்தில் மழை வேண்டி,அதிகாலை வரை நடத்த இரணியன் கூத்து நிகழ்ச்சியில், நாரதர்வேடமிட்ட ராஜையன், நடித்துகொண்டிருந்தபோது, மயங்கி விழுந்து மாரடைப்பால் இறந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், ராஜையன் குடும்பத்துக்கு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்க வலியுறுத்தியுள்ளார்.