கோவை கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டி யிடும் மதிமுக வேட்பாளர் ஈஸ் வரனை ஆதரித்து சுந்தராபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசிய தாவது:
அதிமுக, திமுகவுக்கு தங்க ளது சாதனைகள், கொள்கைகள், தேர்தல் அறிக்கை ஆகிய வற்றின் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் வாக்காளர்க ளுக்கு பணம் கொடுத்து வாக்கு களை வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் இவர்கள் ஆண்ட காலங் களே தோல்விதான் என்பதை நிரூபித்துள்ளனர்.
மதுவிலக்கு குறித்து இந்த கட்சிகள் பேசுவது வேடிக்கை யாக உள்ளது. மதுவிலக்கை இவர்கள் கொண்டு வருவதற்கு முன்னால் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு முதலில் இந்த இரண்டு கட்சிகளின் கட்டுப் பாட்டில் இருக்கும் மது உற்பத்தி ஆலையை மூட வேண்டும். பின் னர் மதுவிலக்கு குறித்து பேசட்டும்.
சில ஊடகங்கள் திட்டமிட்டு பொய்யான கருத்துக் கணிப்பு களை வெளியிடுகின்றன. இந்த கருத்து திணிப்புகளை பொய் யாக்கி நாங்கள் ஆட்சி அதி காரத்தை கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பொள்ளாச்சி
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில் பொள்ளாச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் எஸ். முத்துக்குமாரை ஆதரித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, வளமான தமிழகம், மதுபான கடைகள் இல்லாத, நேர்மையான நிர்வாகத்தை தனிக்கட்சி ஆட்சியால் தர முடியாது.
விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடக்கும். மக்கள் மத்தியில் எலியும் பூனையுமாக இருக்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஊழல் பிரச்சினையாக இருந்தாலும், மதுபானப் பிரச்சினையாக இருந்தாலும் இருவருக்கும் எழுதப்படாத ஒரே கருத்து உள்ளது. இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.