சென்னை ‘சேஞ்ச் இந்தியா’ அமைப்பின் தலைவரான நாராயணன், உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பொதுநல மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் உள் ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் சட்டத்துக்குப் புறம் பான பணிகளில் துப்புரவு தொழிலாளர்கள் இன்னமும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
துப்புரவு தொழிலாளர் கள் கையால் மனிதக் கழிவு களை அள்ளுவதை தடை செய்யும் சட்டப் பிரிவுகள் 11 மற்றும் 12 அவர்களுக்கான மறுவாழ்வு பற்றியும் கூறி யுள்ளது. கடந்த 1993-ல் இருந்து இதுவரை மனிதக் கழிவுகளை அள்ளும்போது 150 பேர் இறந்துள்ளனர். மனிதக் கழிவுகளை கையால் அள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்த பிறகும் கூட 48 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
எனவே தமிழகம் இறந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் அந்த துப்புரவு தொழிலாளிகளைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளவும், பொதுக் கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் “கையால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் தங்களை வெளிப்படையாக அடை யாளப்படுத்தினால், அவர் களது வேலை பறிபோய்விடு வதாகவும், இதனாலேயே அவர்களுக்கு எவ்வித மறு வாழ்வும் கிடைக்கவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட் டுள்ளார். எனவே தமிழக அரசு முதலில் அவர்களின் வேலையைப் பறிக்க மாட்டோம் என்ற நம்பிக் கையை ஏற்படுத்தி, அவர் களுக்கு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” எனக் கூறி விசா ரணையை வரும் ஜூலை 22-க்கு ஒத்திவைத்தனர்.