சென்னையில் வழக்கத்தைவிட அதிகமான அளவு வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அதேபோல், சென்னையில் முதன்முறை வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களித்து வருவதாக அவர் கூறினார்.
11 மணி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராஜேஷ் லக்கானி.
அப்போது அவர், "காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 25.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் வழக்கத்தை விட அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சென்னையில் முதன்முறை வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்.
பிறமாவட்டங்களில் கனமழை காரணமாக வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருக்கிறது. சேலம், நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 30 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது" என்றார்.