தமிழகத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 92 கோடி இதுவரை பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. பணப் பதுக்கல் புகாரால் நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு இடங்களில் வரு மானவரி புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வாக்காளர் களுக்கு பணம் அளிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை தமிழக தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் பறக்கும் படைகள் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டறைகள், குறுஞ் செய்திகள், வாட்ஸ்அப் மூலம் வரும் புகார்கள் அடிப்படையில் தொடர்ந்து சோதனைகள் நடத் தப்பட்டு வருகின்றன. இந்நிலை யில் நேற்று முன்தினம் இரவு முதல் வருமானவரி புலனாய்வுப் பிரிவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று முன் தினம் நந்தனம் பகுதியில் எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ் நிறு வனத்தில் நடந்த சோதனையில் ரூ. 3.58 கோடியை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அதே போல், உள்ளகரம்- புழுதி வாக்கம் பகுதியில் அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் இருந்து ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர, நேற்று முன்தினம், டி.பி.சத்திரம் காவல்நிலையத் துக்கு உட்பட்ட பகுதியில் திமுக வினர் அளித்த புகார் அடிப் படையில், அதிமுகவைச் சேர்ந்த செல்வி மற்றும் வெள்ளச்சி ஆகி யோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப் பட்டனர். ரூ.250 வீதம் தனித்தனி கவர்களில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் பறிமுதல் செய் யப்பட்டு, டிபி சத்திரம் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் தற்போது பறக்கும் படையினரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ கத்தில் சென்னையில்தான் முதல் கைது நடந்துள்ளது.
இதுவரை ரூ.92 கோடி பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருமானவரி புலனாய்வு பிரி வினர் ரூ.26 கோடி பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து நேற்று வரை 190 வீடுகளில் சோதனைகள் நடந்துள்ளன. இவற்றில் 25 இடங்களில் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் சோதனைகள் நடந்து வருகின்றன‘‘ என்றார்.