அதிமுக, பாமக நிர்வாகிகள் பலர் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் ஈரோடு கே.எஸ்.மகேந்திரன், கடலூர் கு.திருஞானம், விழுப்புரம் ப.செந்தமிழ்செல்வன், ஈரோடு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் பெரியசாமி, பவானி ஒன்றியச் செயலாளர் அ.ரவி உள்ளிட்டோர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளரும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான ஏ.பி.என்.கோவிந்தன் உள்ளிட்டோரும் கருணாநிதி முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர்.