தமிழகம்

சின்னசேலம் கலவரம் | இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: ஏடிஜிபி தாமரைக் கண்ணன்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரை கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " கலவரம் நடந்த பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டிருக்கிறது. கலவரத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 30 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்திற்கான காரணம் குறித்து விசாரித்து தெரிவிக்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டபூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT