டிடிவி தினகரன் | கோப்புப் படம். 
தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவி பிரச்சினையை திமுக அரசு சரியாக கையாளவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த பிரச்சினையை திமுக சரியாக கையாளவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்சினையை திமுக அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவிமடுத்து கேட்டு ஆரம்பத்திலேயே காவல்துறையினர் அக்கறையுடன் செயல்பட்டிருந்தால் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது.

இதன் பிறகும் பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் அங்கே அமைதி திரும்புவதற்கும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு ஒரு கணமும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT