முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 135.4 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து ரூல் கர்வ் அடிப்படையில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு கூடுதல் நீரைத் தேக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி அணை நீர்த்தேக்க நடைமுறை பின் பற்றப்படுகிறது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையம் பருவமழைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அணைகளில் நீர்த்தேக்க வரைமுறைகளை (ரூல் கர்வ்) பின்பற்ற உத்தரவிட்டது.
இதன்படி முல்லை பெரியாறு அணையில் நடப்பு ஜூலை மாதத்தில் அதிகபட்சம் 136.4 அடி வரை நீரைத் தேக்கலாம். கடந்த 2 வாரமாக பெய்து வரும் தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் நேற்று மாலை 135.4 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை சார்பில் முதல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 136 அடியில் இரண்டாவது எச்சரிக்கையும், 136.4-ல் மூன்றாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் கேரளப் பகுதிக்கும் திறக்கப்படும். தமி ழகத்தில் லோயர் கேம்ப், வெட் டுக்காடு, கூடலூர், கம்பம் மற் றும் கேரளப் பகுதிகளான வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப் பெரியார் பகுதியைச் சேர்ந்த கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அறிவுறுத் தப்பட்டுள்ளனர் என்றனர்.
விவசாயிகள் எதிர்ப்பு
முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ரூல் கர்வ் முறை இந்த அணைக் குப் பொருந்தாது என்று தமி ழக விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளதுடன் மழைநீரை பயன் படுத்தி அணையில் கூடுதலாக நீர் தேக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.