செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட கீரப்பாக்கம் வாக்கு எண்ணிக்கை மையத்தின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட கீரப்பாக்கம் வாக்கு எண்ணிக்கை மையத்தின் சாவி தொலைந்தது.
இதனையடுத்து, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த தேர்தல் அலுவலர் பன்னீர்செல்வம் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்லலாம் என்றார்.
ஆனால், இம்முடிவை தேர்தல் பார்வையாளர் அபாகான் ஸ்ரீ ஏற்க மறுத்துவிட்டார். சாவியை தேடும்படி உத்தரவிட்டார். பின்னர் மாற்றுச்சாவி கொண்டு வாக்கு எண்ணிக்கை மையம் திறக்கப்பட்டது.
இதனால் வாக்கு எண்ணிக்கை 45 நிமிடங்கள் தாமதாகியது. காலை 8.40-க்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.