தமிழகம்

எதிர்ப்பு கோஷம் வலுப்பெற்ற குமரியில்: 3 நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலுக்குப் பிந்தைய மூன்று நாட்களில் சுமார் ரூ.10 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

கன்னியாகுமரியில் மதுப் பிரியர்களுக்கும் பஞ்சம் இல்லை. பெரும்பாலான மதுக்கடைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கல்லூரிகளுக்கு அருகிலேயே இயங்கி வந்தன. இவற்றை மாற்றக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அந்த வகையில் உண்ணாமலைக் கடையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடையை மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமானது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பின் கடந்த 3 நாட்களில் இதே மாவட்டத்தில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தேர்தலையொட்டி 14,15,16-ம் தேதிகளிலும், வாக்கு எண்ணும் நாளான 19-ம் தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

எனவே இடைப்பட்ட 17-ம் தேதி ரூ.3,32,66,888-க்கும், 18-ம் தேதி 3,57,38,492-க்கும், 20-ம் தேதி 2,86,76,510-க்கும் என மொத்தம் ரூ. 10 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கினை அறிவித்திருந்த திமுக கூட்டணி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது

SCROLL FOR NEXT