தமிழகம்

கொடி, பெயரை பயன்படுத்தாமல் ரசிகர்கள் விருப்பம் போல் வாக்களிக்கலாம்: விஜய் மக்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விருப்பம் போல தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.என்.ஆனந்து வெளியிட்ட அறிக்கையில், ''வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்தக்கட்சிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

ஆனால், விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைப்பாட்டை அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் மக்கள் இயக்கம் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பதுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. விஜய் ரசிகர்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தாங்கள் விருப்பம் போல சட்ட மன்றத் தேர்தலில் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT