தமிழகம்

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை: புயலால் தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புவது தாமதம்

செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமி ழக மீனவர்கள் புயல் காரண மாக தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இலங் கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக் கப்பட்ட தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேர், ராமேசுவரம் மற்றும் நாகப் பட்டினம் மீனவர்கள் 13 பேர் என மொத்தம் 34 மீனவர்களும் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து அந்நாட்டு நீதிமன்றங்களினால் கடந்த இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூத ரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள் ளனர். இலங்கை அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய துணைத் தூதர் என்.நடராஜன் ‘தி இந்து’ விடம் கூறியதா வது: மன்னார் மற்றும் ஊர் காவல்துறை நீதிமன்றங்களில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேர் யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வானிலை சீரான தும் மீனவர்கள் தலைமன் னாரில் இருந்து இலங்கை கடற் படையினரால் அழைத்துவரப் பட்டு சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடற்படையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக் கப்படுவர் என்றார்.

SCROLL FOR NEXT