தமிழகம்

ஓபிஎஸ் குடும்பத்தினர் பதவி நீக்கத்தால் தேனி அதிமுக தலைமை பொறுப்புக்கு கடும் போட்டி

என்.கணேஷ்ராஜ்

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரகுமார் எம்பி, ஜெயபிரதீப், மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் உள்ளிட்டோர் நேற்று அதிமுக.வில் இருந்து நீக்கப் பட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமைப் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் கடும் போட்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு இருவரும் கட் சியை வழிநடத்தி வந்தனர்.

இருப்பினும் ஒற்றைத் தலைமை குறித்து அவ்வப்போது சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சென்னையில் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் பழனி சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதர வாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் அடுத்தகட் டமாக தேனி மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம்.சையது கான், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் எம்பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் நேற்று நீக்கம் செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டத்தைப் பொருத் தளவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆளுமையே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இவரது ஆதரவு பெற்ற எஸ்பிஎம்.சையதுகான் தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருந்தார். தற் போது ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் மாவட்டச் செயலாளரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தேனி மாவட்ட கட்சிப் பொறுப்பை யார் முன் னெடுத்துச் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒற் றைத் தலைமைப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து முன் னாள் மாவட்டச் செயலாளர் எஸ்டிகே.ஜக்கையன், முன்னாள் எம்பி பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் உள் ளிட்ட பலரும் பழனிசாமியை ஆதரித்தனர்.

இடம் மாறிய பலரும் தற்போது மாவட்டச் செயலாளர் பதவியைப் பெறுவதற்காக பல்வேறு முயற் சிகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

எஸ்டிகே.ஜக்கையனைப் பொருத்தளவில் பல பதவிகளில் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல் வத்தின் மீது சில ஆண்டுகளாகவே அதிருப்தியில் இருந்த இவர் தற்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக முயற்சித்து வருகிறார்.

இதேபோல் பலரும் இப்ப தவிக்காக கட்சி மேலிடத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு அழுத்தம் தந்து கொண்டிருக்கி ன்றனர்.

SCROLL FOR NEXT