ரூ.2 கோடி அளவுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாக சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னைஸ் அமிர்தா பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டிப்ளமா இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட், பி.எஸ்சி. - கேட்டரிங் சயன்ஸ் அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்டயம் மற்றும் இளநிலை, முதுநிலை படிப்புகளை அளித்து வருகிறது. இங்கு படித்த மாணவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள 450 ஹோட்டல்களில் உள்ளுறை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டு முதல் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் கல்வியாண்டில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படும். பிளஸ் 2-வில் 1100 மதிப்பெண்கள் 10-ம் வகுப்பில் 450 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முதல் செமஸ்டரில் 10 சதவீத சலுகை கிடைக்கும். அதேபோல பிளஸ் 2-வில் 1000 மதிப்பெண்கள், 10-ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 5 சதவீத கல்வி உதவித் தொகை கிடைக் கும். மேற்கண்ட அனைத்து தகுதிகளையும் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீத சலுகை உண்டு. இவற்றுடன் ஆண்டு வரு மானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத் துக்குள் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களில் 100 பேருக்கு 50 சதவீத கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
ஏற்கெனவே படித்துவரும் மாணவர்களில் முந்தைய செமஸ்டரில் 100 சதவீதம் வருகை தந்துள்ள 1300 பேருக்கு 10 சதவீத கல்விக் கட்டணம் அடுத்த செமஸ்டரில் கழித்துக் கொள்ளப்படும். முந்தைய செமஸ் டரில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள 300 பேருக்கு 10 சதவீத கல்விக் கட்டணம் அடுத்த செமஸ் டரில் கழித்துக்கொள்ளப்படும். மேற்கண்ட இரு தகுதிகளையும் பெற்றுள்ளவர்களுக்கு 20 சதவீத சலுகை அளிக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.