ஆட்டோமொபைல் இன்ஜினீயர் ஆவதே லட்சியம் என மலையாள மொழி பாடத்தில் 3-வது இடம் பிடித்த மாணவர் கூறினார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள கேரளா வித்யா லயம் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் கே.யு.ஹரிகிருஷ்ணன் மலையாளத்தில் 198 மதிப்பெண், ஆங்கிலத்தில் 169, இயற்பியலில் 169, வேதியியலில் 125, கணினி அறிவியலில் 160, கணித பாடத்தில் 72 மதிப்பெண் என மொத்தம் 893 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து, மாணவர் ஹரி கிருஷ்ணன் கூறும்போது, “மலை யாள மொழி பாடத்தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பள்ளி யில் மலையாளம் மொழி பாடம் நடத்தும் ஆசிரியை சுபாஷினி அளித்த பயிற்சியும், எனது பெற்றோர் அளித்த ஊக்கமுமே எனக்கு இந்த சாதனையை செய்ய காரணமாக அமைந்தது.
மேலும், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் எடுக்க வேண்டும் என எந்தவித எண்ணத்துடனும் நான் படிக்கவில்லை. அதேபோல், படிப்புக்காக டிவி பார்ப்பது, விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்ற எவ்வித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நான் தியாகம் செய்யவில்லை’’ என்றார்.
இதே பள்ளியில் படித்த மாணவர் ஆர்.ராம்ராஜ் மலையாள மொழி பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.