தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடத்த மார்ச் 29ம் தேதியன்று வெளியிட்டது.

இதன்படி வரும் 24ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. www.tnpscexams.in மற்றும் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT