மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி பொய் நாடகம் ஆடுகிறார் என்று அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
சோளிங்கரில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் சரவணனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, ‘‘கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுகவுக்கு என மாறி மாறி வாக்களித்தது போதும். இந்த ஒரு முறை பாமகவுக்கு வாக்களித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை மாறிவிடும். பாமகவின் தேர்தல் பிரச்சாரத்தை மற்ற கட்சிகள் காப்பி அடித்துப் பிரச்சாரம் செய்வதை மக்கள் கேலியாகப் பார்க்கின்றனர்.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு ரோப் கார், மற்றும் புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே லட்சியமாக கொண்டுள்ளேன்.
பாமக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற நிலை உருவாக்கப்படும். சோளிங்கரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும்.
மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து கருணாநிதி பொய் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். கருணாநிதிக்கு மது விலக்கு கொண்டு வருவதற்கு முழுமையான எண்ணம் இல்லை. அதனால்தான் திமுகவினருக்குச் சொந்தமான மது ஆலைகளை மூடாமல் மவுனம் காக்கின்றார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதிய வர்களுக்கு தனிப் பிரிவு ஏற்படுத்தப் படும். வயதானவர்களைப் பாதுகாக் கும் அவர்களுக்கு ஆதரவான ஆட்சி யாகவும் பாமக இருக்கும். மது இல்லாத மாநிலம், தன்மானம் இழக் காத மாநிலமாக பாமக ஆட்சியில் தமிழ்நாடு வளம்பெறும்’’ என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘கிரானைட் கொள்ளை சம்பவத் தில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக இரண்டு கட்சிகளும் மாறி மாறி பொய் பேசி வருகின்றன. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியினர் மொத் தம் 10 தொகுதிகளில் கூட டெபாசிட் வாங்க முடியாது. ஜெயலலிதா பணத்தை நம்புகிறார். நான் இளை ஞர்களை நம்புகிறேன்’’ என்றார்.