சென்னை: பெண்ணை அடித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் அந்த மனுவை வாங்கி அவரது தலைமையில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.