சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையின் பெருங்குடல் அறுவை சிகிச்சை மையம் 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழும துணைசெயல் தலைவர் பிரீத்தா ரெட்டிநேற்று அளித்த பேட்டி: அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அடுத்த தலைமுறை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை நாங்கள் தொடர்ந்து வழங்குகிறோம். கடந்த 2016-ம் ஆண்டில் பெருங்குடல் அறுவைசிகிச்சைக்கான சிறப்புப் பிரிவுதொடங்கப்பட்டது.
இது துல்லியமான அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்ததுடன், நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை பெருமளவில் தவிர்க்கிறது. ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சையில் 530-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வெற்றிகரமாக அளிக்கப்பட்டு உள்ளன.
நாட்டிலேயே, இந்த பிரிவில் அதிக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மையங்களில் ஒன்றாக அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது. மருத்துவர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன், நாட்டிலேயே 500-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெருங்குடல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்மருத்துவர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாக 20 முதல் 40வயதுள்ள இளைஞர்கள் அதிகளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள் தாதமாக மருத்துவமனைக்கு வருவது மிகவும் கவலை அளிக்கிறது.
எனவே, புற்றுநோயைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்றார்.