தமிழகத்தில் மேலும் 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் புதன்கிழமை மாலை 7 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரனும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேவூர் எஸ்.ராமச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கஃபிலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட துறைகளைப் பிரித்து அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 4 அமைச்சர்களை சேர்த்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆனது.