மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி அடைந்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் கீதாவு செந்தில் முருகனுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சியில் காலியாக இருந்த 19-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
தேர்தலில் மொத்தம் 1255 வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கீதா செந்தில் முருகன் 777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவருக்கு நகராட்சி அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த வார்டில் திமுக வெற்றி பெற்ற நிலையில், உடன் போட்டியிட்ட மற்ற 4 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.