திண்டுக்கல் சீனிவாசன் | கோப்புப் படம் 
தமிழகம்

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

மேலும், அவர் பொதுக்க்கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தால் வரவு செலவு அறிக்கையை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார்.

இந்நிலையில், அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT