தமிழகம்

துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம்: அதிமுக விதிகளில் செய்துள்ள திருத்தங்கள் என்ன? 

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவில் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களின் முழு விவரம்:

அதிமுக சட்ட விதி எண் 20 ரத்து செய்யப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது. துணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT