தமிழகம்

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: கூடுதலாக 1,000 போலீஸார்

அனிகாப்பா

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் 11-ம் நாளில் அத்தி வரதர் காவிப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

அத்தி வரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரிசையில் வருவதற்காக தடுப்புக் கட்டைகள் மேற்கூரை அமைத்தல் போன்ற விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 11 நாட்களில் அத்தி வரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

SCROLL FOR NEXT