தமிழகம்

ஜெயலலிதாவை ஆதரித்து ஆர்.கே. நகரில் பிரச்சாரம்: மதுரை ஆதீனம் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்த வாரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியமைப்பார்.

இதற்காக, தஞ்சை, வேதாரண்யம், ராமநாதபுரம், திருவாடானை, மதுரை, போடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

சிறப்பாகப் பணியாற்றி வரும் தேர்தல் அதிகாரிகளை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் மக்களின் மனதை மாற்ற முடியாது. ஆன்மிகவாதிகள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை என்றார்.

SCROLL FOR NEXT