கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய நிறுவனத்தில், 4-ம் நாளாக நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அதிமுக பிரமுகர். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் சந்திரசேகர் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் தொடர்பாக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான சந்திரபிரகாஷிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு, விசாரித்து வருகின்றனர். மேலும், பீளமேடு கொடிசியா வர்த்தக மையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள சந்திரபிரகாஷின் வீட்டிலும் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.