தமிழகம்

தேனியில் மேம்பாலம் இல்லாததால் ரயில் வரும் நேரங்களில் கடும் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

என்.கணேஷ்ராஜ்

தேனியின் மூன்று பிரதான இடங்களில் தண்டவாளம் குறுக்கிடுவதால் ரயில் வரும் போது வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. ஆகவே, இப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் இருந்து தேனிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே 26-ம் தேதி முதல் ரயில் இயக்க ப்படுகிறது. மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு கிளம்பும் முன்பதிவற்ற சிறப்பு ரயில் (06701) தேனிக்கு 9.25 மணிக்கு வருகிறது. பின்னர் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பி 7.50 மணிக்கு மதுரையை சென்ற டைகிறது.

தேனியைப் பொறுத்தளவில் அரண்மனைப்புதூர் விலக்கு, பாரஸ்ட் ரோடு, பெரியகுளம் ரோடு ஆகிய பகுதிகளில் ரயில் கடந்து செல்கிறது. இதில் பாரஸ்ட் ரோடு தவிர மற்ற இரண்டு இடங்களிலும் வாகனப் போக்குவரத்து அதிகம்.

குறிப்பாக அரண்மனைப்புதூர் விலக்கில் மதுரை, தேனி, அரண்மனைப்புதூர் ஆகிய மூன்று வழிகளிலும் வாகனங்கள் அதிகளவில் ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றன.

இதே போல் பெரியகுளம் சாலை யும் நகரின் பிரதான போக்குவரத்து வழித்தடம் ஆகும். இங்கும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. ஒவ்வொரு முறை ரயில் கடந்து செல்லும் போது இங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

கடந்து சென்ற பிறகும் இப்பகுதியில் அதிக நேரம் நெரிசல் தொடர்கிறது. ரயில் இயக்கத்துக்கு முன்பே இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் இருந்து வருகிறது. ஆகவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் போக்கு வரத்தும் தொடங்கி உள்ளதால் நகரின் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், பெரிய குளம், மதுரை, கம்பம் சாலைகளை ஒருங்கிணைத்து 10 மீட்டர் அக லத்தில், மொத்தம் ஆயிரத்து 600 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் சோதனைக்காக மண் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் இதற்கான பணி தொடங்கும் என்றனர்.

இருப்பினும் கட்டுமானப் பணி இன்னமும் தொடங்கவில்லை. எனவே இப்பணிகளை விரைவுபடுத்தி நகர நெரிசலை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT