ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பழமை யான கிருஷ்ணர் சிலை குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி அருகே கொத்த புக்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் கிராம மக்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது வில்லாலுடைய அய்யனார் கோயில் பகுதியில் பூமிக்கடியில் அரை அடி உயரமுள்ள, மூன்று கிலோ எடையுள்ள தவழும் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்த சிலை மண்டல மாணிக் கம் விஏஓ புனிதா, மரக்குளம் குரூப் விஏஓ (பொறுப்பு) பாண்டி ஆகியோரிடம் ஒப் படைக்கப்பட்டது. இந்த சிலையின் தன்மையை ஆய்வுசெய்த பொற்கொல் லர்கள் ஐம்பொன் சிலையாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரி வித்தனர்.
இதைத் தொடர்ந்து அச் சிலை கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதாவிடம் ஒப் படைக்கப்பட்டது. இச்சிலை கோயிலுக்குச் சொந்தமானதா அல்லது மர்ம நபர்கள் புதைத்து வைத்தனரா என்ற கோணத்தில் வருவாய்த்துறையினர் விசா ரணை நடத்துகின்றனர்.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பழமையான இச்சிலையை கடத்தல் கும்பல் யாரேனும் பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.