தமிழகம்

துணை முதல்வராக வாய்ப்பில்லை: ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்

செய்திப்பிரிவு

துணை முதல்வர் பதவி தொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி ஆட் சிக்கு வந்தால் ஜி.ராமகிருஷ் ணன் துணை முதல்வராவார் என டி.கே.ரங்கராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறிய தாவது:

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ஆர்வம் கார ணமாக மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் தெரி வித்த கருத்து பத்திரிகைகளில் பெரிய செய்தியாக வெளி யாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விதிமுறைகள்படி மாநிலச் செயலாளர்கள் யாரும் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் களில் போட்டியிட முடியாது. கட்சிப் பணிகளுக்கே முக்கியத் துவம் அளிக்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் கடந்த 2006 முதல் 2011 வரை உள்துறை அமைச்சராக இருந்தவர் கொடி யேறி பாலகிருஷ்ணன். தற் போது மாநிலச் செயலாள ராக இருப்பதால் எம்எல்ஏவாக இருந்தும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் நான் துணை முதல் வராகும் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT