தமிழகம்

சேலம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் - டாஸ்மாக் கடைகள் மூடல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, நேற்று (7-ம் தேதி) காலை 10 மணி முதல் நாளை (9-ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை, 10 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ம் தேதி அன்று முழுவதும் 13 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும்.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 5 கிமீ சுற்றளவுக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, இனாம்வேடுகாத்தாம்பட்டி, பொட்டனேரி ஆகிய கிராம ஊராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது.

மேலும், 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து, 5 கிமீ., சுற்றளவுக்குள் அமைந்துள்ள காடையாம்பாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட 2 மதுபான கடைகள், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட 8 மதுபான கடைகள், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட 3 மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும்.

இதை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT