தமிழகம்

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை: அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வாக்குச்சாவடி - ராஜேஷ் லக்கானி தகவல்

செய்திப்பிரிவு

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் வாக் காளர் அதிகம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக ஆலோ சித்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழக தேர்தல் துறை அடுத்தகட்ட அடிப் படை பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இது தொடர் பாக தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த பகுதிகளில் அதற்கான காரணம் குறித்து அறிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக லயோலா, எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவர்களை பயன் படுத்த அவர்களுடன் பேசி வருகிறோம். ஒவ்வொரு தொகுதி யிலும் குறைந்த அளவு வாக்கு கள் பதிவான வாக்குச்சாவடி களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொகுதியில் 20 அல்லது 25 சாவடிகளுக்குட்பட்ட இடங்களில் இந்தக் கருத்துக்கணிப்பு விரைவில் நடக்கும். அதற்கான கேள்விகள் தயாரிக்கும் பணி, ஆணையத்தின் உத்தரவு வந்ததும் தொடங்கும்.

வாக்குச்சாவடி

சென்னையை பொறுத்தவரை, அதிக அளவில் குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங் கள் அமைந்துள்ள பகுதிகளில், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது அடிப்படை ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில பகுதிகளில் 25 சதவீத அளவுக்கே வாக்குகள் பதிவாகி யுள்ளன. இதற்கு காரணம், வாக்குச்சாவடிகள் அருகில் இல்லை என்பதும் தெரியவந் துள்ளது. குறி்ப்பாக சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திரு வள்ளூர் எல்லையில் மதுர வாயல், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 3,200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், 700-க்கும் அதிகமான வாக்காளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அங்கேயே வாக்குச்சாவடிகள் அமைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். எனவே, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்கள் மாறும்.

வாக்காளர் பட்டியல்

தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக, இரட்டை பதிவுகளை கண்டறிய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சில வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்காமல் உள்ளனர். இதை கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.

இரட்டைப் பதிவுகள்

இதற்காக, முதல்கட்டமாக பெயர், தந்தை பெயர், வயது இவை ஒரே மாதிரியாக இருக்கும் பதிவுகள் எடுக்கப்படுகின்றன. பின்னர் அவற்றில் புகைப்படம் ஒரே மாதிரியாக இருப்பவை பிரிக்கப்படுகின்றன. அதன்பின், கள ஆய்வு நடத்தப்பட்டு இரட்டை பதிவுகள் நீக்கப்படும்.

இதுதவிர, வாக்காளர்களிடம் கைபேசி மூலம் ஒப்புதல் பெறும் மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், வாக் காளரின் கைபேசி இணைக்கப் பட்டிருப்பின், அந்த கைபேசி எண்ணுக்கு நீங்கள் இந்த இடத்தில் வசிக்கிறீர்களா என்ற தகவல் கேட்கப்படும், ஆம் அல்லது இல்லை என பதிலளித்தால், அது பதிவு செய்யப்படும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT