தமிழகம்

தமிழகத்தில் கடுமையான குளிர் அலை; வதந்திகளை நம்ப வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தில் கடுமையான குளிர் அலை" வீசம் என்று எந்த அறிவிப்பு வெளியிடவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்லும் நிகழ்வு காரணமாக தமிழகத்தில் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்து பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடுமையான குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளது என்று எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் ட்விட்டர் பக்கத்தில், "சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்லும் நிகழ்வு காரணமாக தமிழகத்தில் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கவில்லை" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT