தமிழகம்

குடியுரிமையை திருப்பி தராதது ஏன்? - வைரலாகும் லீனா மணிமேகலையின் பழைய பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: காளி படத்தின் சுவரொட்டி சர்ச்சையால் மேலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார் லீனா மணிமேகலை. கடந்த 2013-ம் ஆண்டு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக கடந்த 2013-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார்.

இதுகுறித்து லீனா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘நான் வாழ்நாளில் பிரதமராக நரேந்திர மோடியை பார்க்க நேரிட்டால், எனது பாஸ்போர்ட், ரேஷன், பான்கார்டுகளை கொடுத்து குடியுரிமையையும் ஒப்படைப்பேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதை சுட்டிக் காட்டி லீனா குடியுரிமையை ஒப்படைக்காதது ஏன் என்று சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு லீனா வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘‘ராமர் கடவுள் அல்லர். இவர், பாஜக கண்டுபிடித்த வாக்குப் பதிவு மின் இயந்திரம்’’ என்று தெரிவித்திருந்தார். லீனா தற்போது கனடாவின் டொரன்டோ நகரில் காளி பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்தப் படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால், டொரன்டோ நிர்வாகத்திடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT