தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கருப்புக் கொடி: மோதலில் 5 பேர் காயம்

செய்திப்பிரிவு

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.உலகநாதன் நேற்று முன்தினம் மாலை வாக்கு சேகரிக்க சென்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே மேலநம்மங் குறிச்சியில் உள்ள காலனி தெருவில் 100 வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருத்துறைப்பூண்டி தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் கே.உலகநாதன் மேலநம்மங் குறிச்சிக்கு வாக்கு சேகரிக்க சென்றார்.

அப்போது, காலனித் தெருவுக்கு செல்ல வெள்ளகுளம் என்ற இடத்துக்கு சென்றபோது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துப்பேட்டை நகர முன்னாள் பொருளாளர் மா.பால சுப்பிரமணியன்(35) தலைமையில் கையில் கருப்புக் கொடியுடன் ஏராளமான ஆண்கள், பெண்கள் திரண்டு நின்றனர்.

மேலும், வேட்பாளர் உலகநாத னிடம், “கடந்த 10 ஆண்டுகளாக 2 முறை நீங்கள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், எங்கள் பகுதிக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. நாங்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களை சமாதானப் படுத்துகிறீர்கள். ஆனால், குடிநீர் வசதிகூட இல்லாமல் நாங்கள் குழந்தைகளோடு அவதிப்படு கிறோம். எனவே, நீங்கள் எங்களது காலனித் தெருவுக்கு வாக்கு சேகரிக்க வரக் கூடாது” என தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வேட்பாளர்களுடன் வந்த மக்கள் நலக் கூட்டணி கட்சியினருக்கும், காலனித் தெருவில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி யினருக்கும் வாக்குவாதம் ஏற்பட் டது. அப்போது, வேட்பாளருடன் வந்தவர்கள் வைத்திருந்த கொடிக் கம்பால் தாக்கியதில், காலனித் தெருவைச் சேர்ந்த மா.பாலசுப்பிரமணியன், க.பாரதிராஜா(21), பா.வல்லரசு(19), பி.பிரசாத்(19), மா.தேவி (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT