காரைக்குடி ஐந்துவிளக்கில் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மூத்த தலைவர் ஹெச்.ராஜா. 
தமிழகம்

தனி தமிழ்நாடு கோரிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஹெச்.ராஜா

செய்திப்பிரிவு

காரைக்குடி ஐந்துவிளக்கில் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஹெச்.ராஜா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தனி தமிழ்நாடு வேண்டும் என பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆ.ராசாவின் பேச்சு தமிழக அர சின் நிலைப்பாடாகக் கருதப்படும்.

மேலும் ஆளுநர் அறிக்கை இல்லை என்றாலும், ஆட்சியைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே நினைத்தது நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நுபுர்சர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மாகாளியை இந்துகளுக்கு விரோ தமாக சித்தரித்த லீனா மணி மேகலையைக் கைது செய்ய வேண்டும்.

‘எங்கள் நாட்டு மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி வரும் கருவிகளை, தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதால், எங்களால் கைது செய்யாமல் இருக்கமுடியாது. கைது செய்யாவிட்டால், எங்கள் நாட்டு மீனவர்கள் கேள்வி கேட்பர்,’ என இலங்கை அரசு கூறுகிறது. இதனால் இருநாட்டு மீனவர்களுக்கும் பாதிப்பில்லாமல் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

SCROLL FOR NEXT